தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Panguni Therottam: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!

Panguni Therottam: திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!

Apr 08, 2024 05:51 PM IST Karthikeyan S
Apr 08, 2024 05:51 PM IST
  • பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழா கடந்த 2-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மாள் ஒரு தேரிலும் எழுந்தருளி நான்கு வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
More