Chandrayaan 3: நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3! அடுத்து நடக்கப்போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chandrayaan 3: நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3! அடுத்து நடக்கப்போவது என்ன?

Chandrayaan 3: நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3! அடுத்து நடக்கப்போவது என்ன?

Aug 01, 2023 05:33 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 01, 2023 05:33 PM IST

  • சந்திரயான் 3 விண்கலம், புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்து விட்டு நிலவின் நீள்வட்ட பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நிலவை நோக்கிய பயணத்தில் இருந்து வரும் சந்திரயான் 3 அடுத்து ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் உந்தித் தள்ளப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சந்திரயான் 3 பயணமானது திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் பூமியை நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்த பின்னர் தான் நிலவின் நீள் வட்டப்பாதை நோக்கிய சென்று அங்கும் அதை சுற்றிய பின்னர் தரையிறங்கும். அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலம் புவியின் நீள் வட்டத்தின் இறுதி சுற்று பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்ஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 - 1 மணிக்குள் நிலவின் நீள் வட்ட பாதையை நோக்கி விண்கலம் பயணிக்க தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் சந்திரயான் விண்கலம் பயணிக்கும். அதன்பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More