ISRO: NVS-01 நேவிகேஷன் அமைப்பு உத்தேச சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைப்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Isro: Nvs-01 நேவிகேஷன் அமைப்பு உத்தேச சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைப்பு

ISRO: NVS-01 நேவிகேஷன் அமைப்பு உத்தேச சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி வைப்பு

May 31, 2023 03:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 31, 2023 03:43 PM IST

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி இரண்டாம் தலைமுறை வழிசெலுத்தல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக தரையிறக்கி உத்தேச சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. NVS-01 நிகழ்நேர நிலைப்படுத்தல் மற்றும் நேர சேவைகளை வழங்குகிறது. இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்த குழுவினருக்கு இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது இஸ்ரோவின் மற்றொரு சாதனையாக அமைந்துள்ளது. இந்தியாவின் நேவிகேஷன் செயற்கைகோளாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய நேவிகேஷன் அமைப்புக்கு பெரிய ஊக்கமாக மாறியுள்ளது. ஜிஎஸ்எல்வி- எஃப்12 இந்த நேவிகேஷன் செயற்கைகோள் உத்தேச சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் சிவில் ஏவியேஷன், ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் தயார் செய்யப்பட்டுள்ள ருபிடியம் அடாமிக் கடிகாரத்துடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டுள்ளது.

More