தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Is Soumya Anbumani's Granddaughter Married..? What Do You Say Annamalai!

Annamalai: என்னது. சௌமியா அன்புமணி பேத்திக்கு திருமணமா.. ? என்ன சொல்றீங்க அண்ணாமலை!

Mar 26, 2024 02:23 PM IST Pandeeswari Gurusamy
Mar 26, 2024 02:23 PM IST
  • தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பின் பொழுது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சௌமியா அன்புமணி, வாரிசு அரசியலில் வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் முன் வைத்தனர். இதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார் , அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார் எனவும், அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என குழப்பான பதிலை தெரிவித்தார். கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சௌமியாவுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
More