தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Indian Plane Crashes In Afghanistan? Aviation Ministry Clarifies Over Badakshan Mishap

Plane Crash: இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானில் விபத்து? விமான அமைச்சகம் விளக்கம்

Jan 21, 2024 09:46 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 21, 2024 09:46 PM IST
  • இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் படகஸ்கான் மாகணத்தில் இருக்கும் மலை ஒன்றின் மீது மோதி நொறுங்கியுள்ளது. இந்த விமான விபத்து துரதிர்ஷ்டவசமானது எனவும், விபத்துக்குள்ளானது திட்டமிடப்பட்ட அல்லது திட்டமிடப்படாத சார்டெட் விமானமாக இருக்கலாம் என இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் மொராக்கோ நாட்டு பதிவு கொண்ட சிறிய ரக விமானமாக உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் செய்தி ஊடகம், ரஷ்யாவின் சிவில் விமானங்களின் மாநில பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பால்கன் 10 ரக விமானம், தொடர்பு நிறுத்தப்பட்டு ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது. முதல்கட்ட தகவலின் அடிப்படடையில் விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் இரண்டு பயணிகள் என 6 பேர் பயணித்திருக்கலாம் எனவும், இந்த சம்பவம் ஜனவரி 20ஆம் தேதி இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் தனது நிஜ ஒடுபாதையில் இருந்து விலகி பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த படகஸ்கான் மாகணம் மலைப்பகுதி சீனா, தஜகிஸ்தான், பாகிஸ்தாந் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியாக உள்ளது.
More