Yemen: கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ் மேல்முறையீடு மனு ரத்து - முழு விவரம்-indian nurse faces death in arab nation yemen in murder case - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Yemen: கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ் மேல்முறையீடு மனு ரத்து - முழு விவரம்

Yemen: கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நர்ஸ் மேல்முறையீடு மனு ரத்து - முழு விவரம்

Nov 17, 2023 08:49 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 17, 2023 08:49 PM IST

  • ஏமன் நாட்டில், கொலை வழக்கு ஒன்றில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நர்ஸான நிமிஷா பிரியா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவரது மேல்முறையீடு மனுவை ஏமன் உச்சநீதிமன்றம் கடந்த 13ஆம் தேதி நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கபபட்ட குடும்பத்தாரிடம் இழப்பீடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிமிஷாவின் தாயார் தொடர் வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிமிஷாவின் மேல்முறையீடு ரத்தானது தொடர்பான தகவலை மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2018இல் இந்திய நர்ஸான நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏமன் நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மக்தி என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட மக்தியுடன் இணைந்து 2015 முதல் ஏமனில் கிளினிக் ஒன்றை நடந்தி வந்துள்ளார் நிமிஷா பிரியா. பொருளாதார பிரச்னை காரணமாக நிமிஷாவின் குழந்தையுடன், அவரது கணவர் இந்தியா திரும்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் மக்தி தனது பாஸ்போர்டை பிடுங்கி வைத்து கொண்டதாகவும், போலியான ஆவணங்களை தயார் செய்து தனது கணவன் என வெளியுலகில் நம்ப வைத்து இரண்டு ஆண்டுகள் வரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. மக்தி கொலை செய்த குற்றத்துக்காக நிமிஷா, அவருடன் பணியாற்றிய ஹனான் ஆகியோர் 2017இல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்டது. கொலையான மக்தி குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு நிமிஷா தாயார் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு முடிவை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஏமன் நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு செல்வதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இருப்பினும் சில காரணங்களுக்கு தளர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நிமிஷாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்லது.

More