தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ins Vikrant Mig 29k Landing: ஐஎன்எஸ் விக்ராந்தில் இரவு நேரத்தில் Mig-29 போர் விமானம் தரையிறக்கம் - விடியோ

Ins Vikrant MIG 29K Landing: ஐஎன்எஸ் விக்ராந்தில் இரவு நேரத்தில் MiG-29 போர் விமானம் தரையிறக்கம் - விடியோ

May 25, 2023 09:27 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 25, 2023 09:27 PM IST
  • இந்தியாவின் போர் விமானங்களின் ஒன்றான MiG-29K, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இரவு நேரத்தில் தரையிறங்கியது. இந்த கடற்படையின் மைல்கல் நிகழ்வாக பார்க்கப்படும் இந்த நிகழ்வின் விடியோ வெளியாகியுள்ளது. முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்பு துறைக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் தரையிறங்குவதென்பது சவாலான விஷயமாக பார்க்கப்படும் நிலையில் விமானிகள், ஐஎன்என் குழுவினரின் திறமை, உறுதிதன்மை, பணி நேர்த்தி ஆகியவற்றை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது. அரபிக் கடலில் ஐஎன்எஸ் விக்ராந்த் சென்று கொண்டிருக்கையில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்ட்து. கடந்த பிப்ரவரி மாதத்தில் MiG-29K விமானத்தில் பகல் நேர தரையிறக்கம் செய்து சோதித்து பார்க்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தாங்கும் திறனை கொண்டதாக உள்ளது.
More