தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kohinoor Diamond: ஹோகினூர் வைரம் முதல் பழங்கால பொருள்களை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா சார்பில் பிரச்சாரம்

Kohinoor Diamond: ஹோகினூர் வைரம் முதல் பழங்கால பொருள்களை இங்கிலாந்தில் இருந்து மீட்க இந்தியா சார்பில் பிரச்சாரம்

May 16, 2023 11:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 16, 2023 11:45 PM IST
  • இங்கிலாந்து வசம் இருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா தூதரகம் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ளப்படும் என இங்கிலாந்தில் வெளியாகும் யுகே டெலிகிராப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பழங்கால கணக்கிடுதல் என்ற பிரச்சாரத்தின் மூலம் கோஹினூர் வைரம், பிற விலைமதிப்பற்ற கலைப்பொருள்களை இங்கிலாந்தில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் காலனித்துவத்தின்போது கொள்ளையடிக்கப்பட்டதாகவும், ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் கலைபொருள்களை வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இந்திய தூதர்கள் முறையாக தாக்கல் செய்து மீட்டெடுக்க முயற்சிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோஹினூர் வைரம் என்பது 105 கேரட் விலைமதிப்பற்ற வைரமாக இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்துள்ளது. 1849 முதல் இந்த வைரமானது பிரட்டனின் ராஜ வம்சத்தின் வசம் உள்ளது. இந்த கோஹினூர் வைரம் மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு சொந்தமான பல்வேறு கலைபொருள்களையும் இந்திய துணை கண்டத்தின் ஆட்சியின்போது இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கலை பொருள்களை இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவருவதை பிரதான முயற்சியாக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த கலைபொருள்களின் பட்டியலில் மகராஜா ரஞ்சித் சிங் சிம்மாசனம், திப்பு சுல்தான் வைத்திருந்த அரிய வகை கற்களை பதிக்கப்பட்ட புலி தலை, அமராவதி மார்பிள்கள், தைமூர் ரூபிக்கள், ஷாஜகான் ஒயின் கோப்பைகள், ஹரிகரா கடவுள் சிலை, ஏராளமான இந்து கடவுளின் சிலைகள் போன்றவை உள்ளன.
More