Pragyan Rotating: நிலவின் மேற்பரப்பில் வட்டமிடும் பிரக்யான் ரோவர் - இஸ்ரோ வெளியிட்ட விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pragyan Rotating: நிலவின் மேற்பரப்பில் வட்டமிடும் பிரக்யான் ரோவர் - இஸ்ரோ வெளியிட்ட விடியோ

Pragyan Rotating: நிலவின் மேற்பரப்பில் வட்டமிடும் பிரக்யான் ரோவர் - இஸ்ரோ வெளியிட்ட விடியோ

Aug 31, 2023 11:43 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 31, 2023 11:43 PM IST

  • நிலவில் தனது பணிகளை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் செயல்பாட்டின் புதிய விடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் பரப்பில் பிரக்யான் ரோவர் வட்டமிடும் அந்த காட்சியில், அங்கிருக்கும் பள்ளங்கள் மற்றும் பாறைகளை தவிர்க்கும் பாதைகளை தேடி பயணிப்பது போல் இந்த காட்சி அமைந்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான வழியை தேடுகிறது எனவும், ரோவரின் செயல்பாடு குழந்தை விளையாடுவது போல் இரு்ப்பதாகவும் இஸ்ரோ டுவிட் செய்துள்ளது. 24 விநாடிகள் ஓடும் விதமாக அமைந்திருக்கும் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அடுத்த வாரம் நிலவில் இரவு தொடங்கு இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக அனைத்து விதமான பரிசோதனைகளையும் பிரக்யான் மற்றும் விக்ரம் ரோவார் செய்து முடிக்கும் பணியில் தீவிராக ஈடுபட்டு வருகிறது. இரவு நேரத்தில் நிலவின் தென்துருவத்தில் -200 டிகிரி செல்சியஸ் வரை உறையும் வெப்பநிலை இருக்க கூடும் என கூறப்படுகிறது. முன்னதாக, நிலவின் நிலப்பகுதியில் கந்தகம் இருப்பது பிரக்யான் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

More