Ugram Rifel: 500மீ தூரத்திலும் எதிரியை வீழ்த்தும் பவர்புஃல் துப்பாக்கி! 100 நாள்களுக்குள் உருவாக்கி இந்தியா சாதனை
- உக்ரம் என்ற பெயரில் புதிய தாக்குதல் துப்பாக்கியை இந்தியா வடிவமைத்துள்ளது. டிஆர்டிஓ அங்கமாக இருந்து வரும் ஏஆர்டிஇ என அழைக்கப்படும் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 100 நாள்களுக்கு குறைவாக இதை வடிவமைத்திருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான டிவிபா ஆர்மர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் சேர்ந்த இதன் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது. துப்பாக்கி 7.62 மிமீ காலிபர் சுற்றுகளை வரிசைப்படுத்துவதோடு, 500 மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளை வேட்டையாடும் வல்லமை கொண்டதாக உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகளிடம் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் இன்சாஸ் ரைபிள்களை காட்டிலும் இந்த உக்ரம் சிறப்பு மிக்கதாக உள்ளதாக கூறப்படுகிறது. இன்சாஸ் துப்பாக்கியில் இருந்து வரும் 5.62 மிமீ காலிபரை காட்டிலும் இது அதிக ரவுண்டுகளை கொண்டுள்ளது. இந்த ராணுவ வீரர்களின் தேவை கருதி இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டு திறன் தொடர்பாக பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. குளிர்காலம், கோடைகாலம், நீருக்கு அடியில் என அனைத்து நிலைகளிலும் இந்த துப்பாக்கி பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதற்கிடையே 7.63 காலிபர் ரவுண்டுகளுடன் கூடிய ஏகே 203 ரக துப்பாக்கி உருவாக்குவதற்கு ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளது இந்தியா.