Chandrayaan 3: வரலாறு படைத்த இந்தியா! நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலம்- விடியோ
- நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி இந்தியா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் வெற்றிகமாக சந்திரயான் 3 தரையிறங்கியிருக்கும் நிலையில், அங்கு தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமான தரையிறக்கம் மூலம் 140 கோடி இந்தியர்களின் கனவும், பிரார்த்தனையும் நிறைவேறியுள்ளது. நிலவின் தென்துருவத்தில் உறைந்த தண்ணீர் இருக்ககூடும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்திரயான் 3 அதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு சந்தியான் 3 செயல்பாடானது இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 2019இல் நிலவுக்கான பயணமான சந்திரயான் 2 முயற்சியை தோல்வியை சந்தித்தது. நிலவின் சுற்றுப்பாதையை அடைந்திருந்தாலும் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்காததால் நிலவின் பரப்பில் மோதி செயல் இழந்தது. விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் மட்டும் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் 3 தரையிறங்கிய பகுதி அருகில்தான் சந்திரயான் 2 செயலற்று போனது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு நிலவில் ரோவரை தரையிறக்கிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது.: