Parliament Security: மூன்று அடுக்கு சோதனை! நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணி - ஒரு பார்வை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Parliament Security: மூன்று அடுக்கு சோதனை! நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணி - ஒரு பார்வை

Parliament Security: மூன்று அடுக்கு சோதனை! நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணி - ஒரு பார்வை

Dec 14, 2023 11:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 14, 2023 11:34 PM IST

  • நாடாளுமன்ற பூஜ்ஜியம் நேரத்தில் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நாட்டின் நாடாளுமன்றத்திலேயே பாதுகாப்பு குறைபாடு இருப்பதை வெளிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைப்பு குறித்து கேள்வி எழுப்பும் விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற பல அடக்கு பாதுகாப்பு அமைப்பு பற்றி பார்க்கலாம். நாடாளுமன்றத்துக்கு வரும் பார்வையாளர்கள் எம்பிக்களிடமிருந்து பாஸ் பெற வேண்டும். இங்கு வரும் பார்வையாளர்கள், பணியாளர்கள் என அனைவரும் முழுமையாக சோதனை (FRISKING) செய்யப்படுவார்கள். அனைவருக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவு வாயில், இரண்டாவதாக உட்புற கேட் அருகேயும், மூன்றாவதாக கோரிடர் பகுதியில் பல்வேறு இடங்களில் பார்வையாளர்களின் கேலரிக்களுக்கு அருகேயும் மேற்கொள்ளப்படுகிறது. அங்குள்ள பணியாளர்கள் கண்டிப்பாக ஐடி கார்டு வைத்துக்கொள்ள வேண்டும். நாடளுமன்ற வளாகத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வல்லமை டெல்லி போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-தீபெத் பார்டர் போலீஸ், சிறப்பு பாதுகாப்பு குழு, தேசிய பாதுகாப்பு படை ஆகியவற்றிடம் உள்ளது.

More