Nuh Violence: பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட தாக்குதல் - வெளியான அதிர்ச்சி தகவல்
- ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை விளைவு டெல்லியின் என்சிஆர் பகுதியிலும் மோதல் உருவாக்கியுள்ளது. மோனு மனேசர் விடியோ வைரல் ஆனதை அடுத்து விஎச்பி பேரணியை தாக்குவது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், உள்ளூர் பஞ்ரங் தள் கட்சியை சேர்ந்த பிரமுகரான பிட்டு பஜ்ரங்கி என்பவர் பேசிய விடியோவின் விளைவு காரணமாக இந்த வன்முறை மேலும் உச்சமடைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுனைத் மற்றும் நசீர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், மோனு வெளிப்படையாக மத ஊர்வலங்களில் கலந்து கொண்டது மேவாட்டில் உள்ள உள்ளூர் இஸ்லாமிய குழுக்களை கோபமடைய செய்துள்ளன. குறைந்தது 3 ஆயிரம் கிளாஸ் பாட்டில்கள், 300 பைக்குகளில் குழுக்களாக வந்த இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். ராஜஸ்தான் கொல்லப்பட்ட ஜுனைத் மற்றும் நசிர் ஆகியோர் மாடு திருட வந்துள்ளனர் என சந்தேகப்பட்டு மோனு என்பவரின் தலைமையின் கீழ் கும்பல் ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்தது. அதேபோல் பிட்டு பஞ்ரங்கி விடியோவில், விஎச்பி இன் இந்த பிரிஜ்மண்டல தர்மிக் யாத்திரை நிறுத்த மேவாட்டில் யாருக்காவது துணிச்சல் இருக்க என்ற தூண்டுதலை ஏற்படுத்துவதும் விதமாக பேசியது வன்முறைக்கு உரமிட்டது. ஜூலை 21 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு இடையே நூ மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் குழுக்கள் சந்திப்பு நிகழ்த்தி விஎச்பி யாத்திரையில் மோனு மனேசார் பங்கேற்ககூடும் என கருதி தாக்குதலுக்கு திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வாட்ஸ்குழுக்களும் உருவாக்கப்பட்ட கற்கள் வீசுவது போல், கிளாஸ் பாட்டில்கள் வீசுவது வரை திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கிளாஸ் பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பி கூட்டத்தின் மீது வீசியுள்ளனர். ஜூலை 31ஆம் தேதி யாத்திரையின்போது சுமார் 300 வரையிலான கிராமத்தின் மலை பகுதி அருகே ஒன்று கூடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக நூ மாவட்ட போலீசாருக்கு யாத்திரை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப போலீஸ் தரப்பில் தயாராக இருந்தபோதிலும், வன்முறை கட்டுக்கடாமல் போயுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு பல்வேறு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.