Halal Tea: ரயிலில் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட டீ - கோபமடைந்த பயணியை சமாதானம் செய்யும் ஊழியர்!வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Halal Tea: ரயிலில் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட டீ - கோபமடைந்த பயணியை சமாதானம் செய்யும் ஊழியர்!வைரல் விடியோ

Halal Tea: ரயிலில் வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட டீ - கோபமடைந்த பயணியை சமாதானம் செய்யும் ஊழியர்!வைரல் விடியோ

Jul 22, 2023 09:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 22, 2023 09:00 PM IST

  • ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தேநீர் ரயில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த பயணி ரயில் பணியாளரிடம் கேள்வி கேட்டுள்ளார். அத்துடன் அவர் கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், தேநீர் எப்படியாக இருந்தாலும் அது சைவம்தான் என்று ஐஆர்சிடிசி ஊழியர் விளக்கம் அளித்துள்ளார். அந்த டீ பாக்கெட்டில் இருக்கும் சைவத்தை குறிக்கும் பச்சை வட்டத்தை காட்டி பயணியிடம் விவரித்துள்ளார். இந்த விடியோ தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய விவாதமே நிகழ்ந்துள்ளது. கடந்த 1974இல் முதல் முறையாக வெட்டப்படும் இறைச்சிக்கு முதல் முறையாக ஹலால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1993 வரை இறைச்சி பொருள்களுக்கு மட்டும் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பிறகு காஸ்மெடிக்ஸ், மருத்துவ பொருள்களுக்கும் இந்த சான்றிதழ் அளிக்கப்பட தொடங்கப்பட்டுள்ளது. அரேபியாவில் ஹலால் என்றால் அனுமதிக்கப்படுவது என்று பொருள். இஸ்லாமிய சட்ட விதிகளுக்கு உள்பட தயார் செய்யப்படும் உணவுகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சைவ உணவுகளில் பொதுவாக இறைச்சி அல்லது அது தொடர்பான இணை பொருள்கள் எதுவும் சேர்க்கப்படாது. சில இனிப்பு வகை சைவ உணவுகளில் மது சார்ந்த பொருள்கள் சேர்க்கப்படும். இதனால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு ஒன்றில் ஹலால் சான்றிதழுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கிடையே இந்த வைரல் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது, விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

More