Lebanon Bomb Attack: அடுத்தடுத்து 25 குண்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசிய லெபனான்
- ஹமாஸுடன் இஸ்ரேல் தெற்கு பகுதியில் போர் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு இஸ்ரேல் பகுதியில் லெபனான் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நமிடத்துக்குள் லெபனான் படையினர் அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ராக்கெட்டுகள் சாசா மற்றும் ஸ்தூலா குடியிருப்புகளில் விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. லெபானின் இந்த தாக்குதல் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்றிருப்பதாக பார்க்கப்படுகிறது. தெற்கு லெபனானில் பல ஹெஸ்பொல்லா தளங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியதற்கு பதில் தாக்குதலாக இது அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் யாரும் காயம் ஏற்படவில்லை எனவும், இந்த தாக்குதல் மேலும் தொடரும் என லெபானான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.