மலைப் பிரதேசம் போல் காட்சியளிக்கும் தூத்துக்குடி!
- Heavy snowfall: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை முதலே பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பிள்ளையார்நத்தம், சொக்கலிங்கபுரம், துளிசிப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் காலை 7 மணியை கடந்தும் பனிமூட்டம் விலகாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். வழக்கத்தை விட கடும் பனிப்பொழிவு காரணமாக தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் சிரமத்திற்கு ஆளாகினர். பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.