Hamas Attack: குழந்தை பையிலிருந்து எடுக்கப்பட்ட 7 கிலோ எடையிலான வெடிகுண்டு - அதிர்ச்சி விடியோ வெளியிட்ட இஸ்ரேல்
- கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியபோது, கண்ணி வெடிகளை எப்படி வைத்தார்கள் என்பதைக் வெளிக்காட்டும் விடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக குழந்தையின் முதுகு பையில், 7 கிலோ எடையிலான வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. ஹமாஸ் படையினர் இஸ்ரேலை எவ்வாறு அச்சுறுத்தியது என்பதற்கு, இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களை சிக்க வைக்க முயற்சித்ததற்கான உதாரணமாக குழந்தை பையில் இருந்து வெடிகுண்டு எடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோர் 7ஆம் தேதி தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் படையினர் விட்டு சென்ற ஆயுதங்களை மீட்கும் பணியை இஸ்ரேல் படையினர் தற்போது வரை தொடர்ந்து வருகின்றனர். எதுவும் அறிந்திராத அப்பாவி மக்களை கொலை செய்யும் முயற்சியில் ஹமாஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும், குழந்தைகளின் பை உள்பட பல்வேறு பொறிகளையும் அவர்கள் வைத்திருந்தாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது