தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Uttar Pradesh: மாணவர்களை வரவழைக்க பலே டெக்னிக்! உபியில் வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய அரசு பள்ளி

Uttar Pradesh: மாணவர்களை வரவழைக்க பலே டெக்னிக்! உபியில் வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றிய அரசு பள்ளி

May 01, 2024 07:32 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 01, 2024 07:32 PM IST
  • உத்தரபிரதேசம் மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியின் வகுப்பறை ஒன்று செயற்கை நீச்சல் குளமாக மாற்றப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் வெப்பநிலை அதிகரித்திருக்கும் நிலையில், அதிலிருந்து சமாளிக்க வகுப்பறையில் நீரை கொட்டி தற்காலிக நீச்சல் குளமாக மாற்றியுள்ளனர். இதன்மூலம் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. "ஹோலி பண்டிகைக்கு பிறகு பள்ளி வரும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் அறுவடை பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களை பள்ளிக்கு வரவழைக்க இந்த செயற்கையான நீச்சல் குளம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கோடையின் வெப்பத்தை சமாளிக்கவும், நீரில் துள்ளி குதித்து விளையாடவும் மாணவர்கள் பள்ளி வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதன்மூலம் வருகை பதிவும் அதிகரித்துள்ளது" என அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
More