தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Government School Students Rally Near Thoothukudi

Thoothukudi: அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க புது யுக்தி.. அசத்தும் தலைமை ஆசிரியர்!

Mar 18, 2024 02:07 PM IST Karthikeyan S
Mar 18, 2024 02:07 PM IST
  • தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராமனூத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் தலைமை ஆசிரியர் இப்ராஹிம் ஏற்பாட்டில் புதிதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர் முத்தரசனுக்கு மாலை அணிவித்து குதிரை மேல் அமர வைத்து இராமனூத்து கிராம தெருக்கள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று வகுப்பறைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர் முத்தரசனுக்கு மாலை அணிவித்து குதிரை மேல் அமர வைத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய நிகழ்வு கிராம மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
More