Ecuador: லைவ் டிவியில் போர் அறிவித்த கேங்ஸ்டர்கள்! ஈகுவடாரில் பதற்றம் - அவசர நிலை பிரகடனம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ecuador: லைவ் டிவியில் போர் அறிவித்த கேங்ஸ்டர்கள்! ஈகுவடாரில் பதற்றம் - அவசர நிலை பிரகடனம்

Ecuador: லைவ் டிவியில் போர் அறிவித்த கேங்ஸ்டர்கள்! ஈகுவடாரில் பதற்றம் - அவசர நிலை பிரகடனம்

Jan 10, 2024 06:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 10, 2024 06:00 PM IST

  • ஈகுவாடார் நாட்டில் ஆபத்தான கிரிமினல் கைதியாக இருந்த நபர் சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசாரை தாக்கியதோடு, டிவி ஸ்டேஷனிலும் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு மாஸ்க் அணிந்த நபர் ஈகுவாடார் நாட்டை சேர்ந்த டிசி டிவி தலைமையகத்தில், நேரலை நிகழ்ச்சிக்கு இடையே குறுக்கிட்டு போர் அறிவிப்பை தெரிவித்த சம்பவம் நாட்டு மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. நாட்டின் மூன்று முக்கிய நகரங்களில் 7க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளனர். ஈகுவாடார் நாட்டு அதிபர் டேனியல் நோபோவா, ராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதுடன் 60 நாள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். முன்னதாக, டிவி ஸ்டேஷனில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் குழப்பிய நிலவிய நிலையில் பின்னர் போலீசார் அங்கு சென்றனர். இதற்கிடையே சுமார் இந்த கேங்ஸ்டர் குழுவை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் பிணை கைதிகலாக இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழலாம் என்ற வெளியான தகவலால் ஈகுவாடார் நாட்டில் பல்வேறு பகுதிகள் கடைகள் மூடப்பட்டன. போதை பொருளான கொக்கைன் ஏற்றுமதி செய்யு நாடுகளான பெரு, கொலம்பியா நாடுகளுக்கு நடுவே அமைதியான நாடாக இருந்து வந்த ஈகுவாடார் நாட்டில் சமீப காலமாக கேங்ஸ்டர்களால் வன்முறை வெடித்து வருகிறது.

More