தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Former Minister Sellur Raju Press Meet At Madurai

Sellur Raju vs Annamalai:‘அண்ணாமலை ஒரு அரைவேக்காடு’.. செல்லூர் ராஜூ கடும் தாக்கு!

Mar 17, 2024 02:12 PM IST Karthikeyan S
Mar 17, 2024 02:12 PM IST
  • மதுரை கோச்சடை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலைதான். மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையில், தலைவர்களை அண்ணாமலை மதிக்காமல் அரைவேக்காடுத்தனமாக பேசுகிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போதுதான் மக்கள் பாஜகவுக்கு என்ன பதிலடி கொடுத்துள்ளார்கள் என்பது தெரியும். அதன்பிறகுதான் அண்ணாமலை இருப்பாரா, தொடர்வாரா என்பதும் தெரியும்." என்றார்.
More