தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Former Aiadmk Minister Dindigul Sreenivasan Criticized On Bjp

'பாஜகவை அழிக்கும் வரை ஓய மாட்டோம்' - திண்டுக்கல் சீனிவாசன் சூளுரை!

Feb 01, 2024 08:45 PM IST Karthikeyan S
Feb 01, 2024 08:45 PM IST
  • திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தற்பொழுது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். ஓ பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம். தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதன் பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு. பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் எனத் தெரிவித்தார்.
More