தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vk Sasikala: 'அதிமுகவில் எனது Entry தொடங்கிவிட்டது' - அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய சசிகலா!

VK Sasikala: 'அதிமுகவில் எனது Entry தொடங்கிவிட்டது' - அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிய சசிகலா!

Jun 17, 2024 12:27 PM IST Karthikeyan S
Jun 17, 2024 12:27 PM IST
  • சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக முடிந்து விட்டது என்று நினைக்க முடியாது, ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. 2026ஆம் ஆண்டில் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைப்போம். விரைவில் பட்டித்தொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். திமுகவின் சலசலப்பு எப்படி ஆகப்போகிறது என்று பாருங்கள். திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் நாம் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சாதி அரசியல் செய்திருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து இருக்க போகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More