Madurai: கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையில் திடீரென காட்டு தீ பரவியதால் பரபரப்பு!
- மதுரை மாவட்டம் பசுமலை அருகே மாடக்குளம் பகுதியில் உள்ள கபாலீஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் திடீரென காட்டு தீ பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையில் உள்ள மரங்களில் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் அந்த பகுதி முழுவதுமே புகை மூட்டம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலையில் தீ பிடித்தது எப்படி என காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.