தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Leopard: கூண்டில் சிக்கியதால் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் சிறுத்தை - வீடியோ!

leopard: கூண்டில் சிக்கியதால் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் சிறுத்தை - வீடியோ!

Jun 08, 2024 06:25 PM IST Karthikeyan S
Jun 08, 2024 06:25 PM IST
  • நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை எஸ்டேட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கடந்த 4 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கூண்டு வைத்து கண்காணித்து வந்த நிலையில், சனிக்கிழமை காலை சிறுத்தை கூண்டில் சிக்கியது. இரும்பு கூண்டில் சிக்கியதால் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும் சிறுத்தையை தெப்பக்காடு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
More