Vijayawada Flood: விஜயவாடா நகரை சூழ்ந்த வெள்ளம்! ட்ரோன் உதவியுடன் பொதுமக்களுக்கு உணவுகள் விநியோகம்
- ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரமான விஜயவாடாவில் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை அரசு பல்வேறு வகைகளில் வழங்கி வருகிறது. அதன்படி விஜயவாடவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ட்ரோன் உதவியுடன் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன