Kovilpatti: ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்..தேர்தல் பறக்கும் படை அதிரடி!
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவணமின்றி மினி வேனில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின் புதூர் சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆனந்த லட்சுமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சம் மதிப்பிலான ஹாட் பாக்ஸ்கள் மறைத்து வைத்து கொண்டு செல்வதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து 250 அட்டைப் பெட்டிகளில் இருந்த ஹாட் பாக்ஸை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.