Kovilpatti: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kovilpatti: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

Kovilpatti: செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

Published Apr 06, 2024 12:24 AM IST Karthikeyan S
Published Apr 06, 2024 12:24 AM IST

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழைமை வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்ரல் 5) தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

More