தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

Apr 30, 2024 08:14 PM IST Karthikeyan S
Apr 30, 2024 08:14 PM IST
  • கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணபுரத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. புன்னச்சேரி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, அந்த காருக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிச்சென்ற காசர்கோடு சாஸ்தம்பாறையைச் சேர்ந்த பத்மகுமார் (59), பீமநதியைச் சேர்ந்த சூரிக்காட் சுதாகரன் (52), சுதாகரன் மனைவி அஜிதா(35), அவரது தந்தை கிருஷ்ணன் (65), ஆகாஷ் (9) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More