தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fire Breaks Out In Wooden Stick Cotton Near Kovilpatti

Kovilpatti: கோவில்பட்டியில் தீப்பெட்டி குடோனில் பயங்கர தீ விபத்து

Mar 16, 2024 01:31 PM IST Karthikeyan S
Mar 16, 2024 01:31 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் பகுதியில் தீப்பெட்டி கம்பெனிக்கு தேவையான மரக்குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மரக்குச்சிகளை குடோனில் இறக்கி வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மரக்குச்சிகள், தீப்பெட்டி அட்டைகள் உள்ள குடோனில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இருப்பினும் பலலட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் மற்றும் தீப்பெட்டி அட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
More