தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fire Accident In Educational Institution, Visakhapatnam

விசாகப்பட்டினம் பிரபல கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

Feb 27, 2024 06:16 PM IST Karthikeyan S
Feb 27, 2024 06:16 PM IST
  • Visakhapatnam: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா நகரில் ஆகாஷ் பைஜூஸ் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் இன்று காலை திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புப்படையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More