Nirmala Sitharaman: நிர்மலா சீதாராமன் சிதம்பரம் தொகுதிக்கு கொடுத்த சூப்பர் வாக்குறுதி!
- சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "விவசாயிகளின் நலனை காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 60 கி.மீ ரோடுக்கு 1025 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களையும் விவசாயி என அங்கீகரித்து கிஷான் கிரடிட் கார்டை கொடுத்து அவர்கள் மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் வாங்க முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.