தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actress Gauthami: ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் நடிகை கௌதமி புகார்!

Actress Gauthami: ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் நடிகை கௌதமி புகார்!

May 07, 2024 12:43 PM IST Karthikeyan S
May 07, 2024 12:43 PM IST
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.3 கோடி பெற்ற அழகப்பன், 57 லட்சத்திற்கு மட்டும் நிலம் வாங்கி கொடுத்த நிலையில் எஞ்சிய பணத்தை அளிக்கவில்லை என நடிகை கெளதமி புகார் அளித்துள்ளார். இதற்கென ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு நடிகை கௌதமி வந்திருந்தார். அப்போது நடிகை கௌதமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "முக்கியமான விஷயம் தொடர்பாக புகார் அளிக்க வந்துள்ளேன். இதில் உள்ள விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இதில் உள்ள விஷயங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். அந்த வழக்கு தொடர்பான விவரங்களை போலீஸாரிடம் தெரிவிக்க வந்துள்ளேன். ராமநாதபுரம் நிலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளேன். போக போக அனைத்து விவரங்களும் தெரியவரும்." என்றார்.
More