தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Explosives Seized: பொள்ளாச்சி: கல்குவாரியில் மறைத்து வைக்கப்பட்ட 1200 வெடிபொருள்கள் பறிமுதல் - இருவர் கைது

Explosives Seized: பொள்ளாச்சி: கல்குவாரியில் மறைத்து வைக்கப்பட்ட 1200 வெடிபொருள்கள் பறிமுதல் - இருவர் கைது

May 04, 2024 08:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 04, 2024 08:15 PM IST
  • கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆனைமலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து போலீசார் சோதனையிட்டபோது தளபதி (70) என்பவருக்கு சொந்தமான கல்குவாரி தோட்டத்தில் ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள் 350 ஜெலடின் குச்சிகள் உள்பட 1200 வெடி பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடார்பாக தளபதி மற்றும் ராமசாமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனைமலை காவல் நிலையத்துக்கு இவர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
More