Elon Musk Vs Mark Zuckerberg: சண்டைக்கான விதிமுறைகள் என்ன? லைவ் ஸ்டீரிமிங் செய்ய முடிவு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Elon Musk Vs Mark Zuckerberg: சண்டைக்கான விதிமுறைகள் என்ன? லைவ் ஸ்டீரிமிங் செய்ய முடிவு

Elon Musk Vs Mark Zuckerberg: சண்டைக்கான விதிமுறைகள் என்ன? லைவ் ஸ்டீரிமிங் செய்ய முடிவு

Aug 09, 2023 11:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 09, 2023 11:58 PM IST

  • சமூக ஊடக வல்லுநர்களான டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர், தற்போது X நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எலோன் மஸ்க் மற்றும் ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு இடையேயான சண்டை ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவன தலைவரான ஜூக்கர்பெர்க் தனது புதிய சமூக ஊடக செயலியான த்ரெட்ஸில், தனது தொழில் ரீதியிலான போட்டியாளரான மஸ்க் சண்டைக்காக மிகவும் ஆர்வமாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு பின் மஸ்க், X செயலியில் சண்டையிடுவதற்காக வெஸ்ட் லிப்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த இருவரின் சண்டையின் மூலம் பெறப்படும் பணம் அனைத்தும் தொண்டுக்காக செலவழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவும் சமூக வலைதள பெரும் புள்ளிகளான ஜூக்கன்பெர்க் - மஸ்க் ஆகியோர் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையிலான சண்டையின்போது இடுப்பு, முதுகு தண்டுவாடம், கண்கள், கழுத்து பகுதிகளில் தாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிமிட சுற்றுக்கு பிறகு நடுவர்கள் ஒரு மனதாக எடுக்கும் முடிவின்படி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். நாக்அவுட் மூலமாகவும் இந்்த போட்டி நிறைவு பெறலாம். அதாவது எதிராளியை பஞ்ச் அல்லது கிக் மூலம் நாக்அவுட் செய்யலாம் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல், X செயலியில் (ட்விட்டர் செயலியின் தற்போதைய பெயர்) சண்டை லைவ் ஸ்டீரிம் செய்யப்படும் என கூறினார்.ச

More