தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  World Record: ஒரு மணி நேரம் கிட்டார் வாசித்தவாறே கத்தி சிலம்பம் சுற்றிய சிறுவன் - திருச்சியில் உலக சாதனை முயற்சி

World Record: ஒரு மணி நேரம் கிட்டார் வாசித்தவாறே கத்தி சிலம்பம் சுற்றிய சிறுவன் - திருச்சியில் உலக சாதனை முயற்சி

Jun 24, 2024 03:01 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 24, 2024 03:01 PM IST
  • திருச்சியை சேர்ந்த செந்தில்குமாரன் - மங்களபிரியா தம்பதியின் மகன் எட்டு வயது சிறுவன் ரித்விக் ஸ்ரீஹரன். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரித்விக், கிட்டார் இசைப்பது, சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளவராக இருக்கிறார். சிறுவனின் திறமையை பார்த்த பெற்றோர் அவரை ஊக்குவித்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் ஸ்போட்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில்  ஒரு கையில் கிடார் இசைத்து கொண்டு, ஒரு கையில் வால் வீசிய படி சிறுவன் ரித்விக் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். ரித்விக்கின் இந்த சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட், உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. சிறுவனைப் பாராட்டி சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளன.  உலக சாதனை படைத்த சிறுவனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்
More