தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps:உயிரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்.. திமுகவை பொளந்துகட்டிய ஈபிஎஸ்!

EPS:உயிரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்.. திமுகவை பொளந்துகட்டிய ஈபிஎஸ்!

Jun 20, 2024 11:21 PM IST Karthikeyan S
Jun 20, 2024 11:21 PM IST
  • கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை சந்தித்தபின் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவல்நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை என்றால் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம். மிகப்பெரிய கும்பல் இதற்கு பின்னால் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டானுக்கு முக்கியம். மக்கள் மீது அக்கறை இல்லை. கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழ்நாட்டில் எந்த மருத்துவமனையிலும் இல்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றார்
More