Youtuber Manhandled: பெங்களூருவில் யூடியூப்பரை மிரட்டிய வியாபாரி கைது - வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Youtuber Manhandled: பெங்களூருவில் யூடியூப்பரை மிரட்டிய வியாபாரி கைது - வைரல் விடியோ

Youtuber Manhandled: பெங்களூருவில் யூடியூப்பரை மிரட்டிய வியாபாரி கைது - வைரல் விடியோ

Jun 14, 2023 05:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 14, 2023 05:50 PM IST

  • கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள சிக்பெட் பகுதியில் அமைந்திருக்கும் சோர் பஜாரில் (திருடர்கள் பஜார்) விடியோ பதிவு செய்து கொண்டிருந்தார் டச்சு நாட்டை சேர்ந்த யூடியூப்பரான பெட்ரோ மோடா. அப்போது அங்கிருந்த வியாபாரி ஒருவர் திடீரென யூடியூப்பரின் கையை பிடித்து இழுத்து மிரட்டியுள்ளார். அத்துடன் இங்கு விடியோ எடுக்ககூடாது என்று கூறி கேமராவை பிடுங்க முயற்சித்துள்ளார். இந்த காட்சிகள் யூடியூப்பரின் விடியோவில் பதிவாகியுள்ளது. வியாபாரி தன்னை பிடித்தபோது நமஸ்கார் என கூறியவாறே அவரது பிடியிலிருந்து விலக முயற்சித்துள்ளார் யூடியூப்பர். தன்னை விட்டு விடுமாறும் அவர் கெஞ்சியுள்ளார். சில விநாடி போராட்டத்துக்கு பிறகு வியாபாரி பிடியிலிருந்து தப்பி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்துள்ளார் யூடியூப்பர் பெட்ரோ மோடா. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் டச்சு யூடியூப்பரிடம் தகராறில் ஈடுபட்ட நபரின் பெயர் நவாப் கான் என தெரியவந்தது. பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் யூடியூப்பரிடம் விடியோவை டெலிட் செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கைதான நவாப் கான் கூறியுள்ளார். ஆனாலும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது, தற்போதுதான் அந்த யூடியூப்பர் இந்த விடியோவை பதிவேற்றியிருப்பதாகவும் போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று கடந்த ஆண்டில் தென் கொரியாவை சேர்ந்த பெண் யூடியூப்பர் ஒருவர் மும்பையில் நடுவிதியில் வைத்து வியாபாரி ஒருவரால் துன்புறுத்தப்பட்டார். அந்த விடியோவும் வைரலானது.

More