Palani Temple : பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? தங்கம் மட்டும் 1196 கிராம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani Temple : பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? தங்கம் மட்டும் 1196 கிராம்!

Palani Temple : பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா? தங்கம் மட்டும் 1196 கிராம்!

Published Apr 13, 2024 01:06 PM IST Divya Sekar
Published Apr 13, 2024 01:06 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பக்தர்கள் வருகை காரணமாக நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது. எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 5 கோடியே 29 இலட்சத்து 34ஆயிரத்து 887 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1196 கிராமும், வெள்ளி 21,783 கிராமும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

More