தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udhayanidhi: கோவையில் அமைச்சர் உதயநிதியின் அனல்பறந்த பிரசாரம்!

Udhayanidhi: கோவையில் அமைச்சர் உதயநிதியின் அனல்பறந்த பிரசாரம்!

Apr 17, 2024 07:16 PM IST Karthikeyan S
Apr 17, 2024 07:16 PM IST
  • கோவை மக்களவைத் தொகுதி சிங்காநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், 2021-ல் தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்து, இவர் தான் முதலமைச்சராக வர வேண்டும் என மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைத்தனர். தவழ்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிசாமி. கடைசியில் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரின் காலையும் வாரி விட்டதுடன், அவர் யார் என்று கேட்டவர்தான் பழனிசாமி. சசிகலாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பச்சை துரோகம் பண்ணியவர் தான் எடப்பாடி பழனிசாமி. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்து உரிமைகளையும் பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார்." இவ்வாறு அவர் பேசினார்.
More