Kanimozhi: "எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்" - ஆளுநருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
- சென்னையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மாநில பாடத்தை ஆளுநர் படித்தாரா? என்று தெரியாது. நாங்கள் எல்லோரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். உலகம் முழுவதும் தலைசிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லோரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை." என தெரிவித்துள்ளார்.