தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: பிரச்சார களத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக வேட்பாளர்!

Coimbatore: பிரச்சார களத்தில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக வேட்பாளர்!

Apr 17, 2024 02:35 PM IST Pandeeswari Gurusamy
Apr 17, 2024 02:35 PM IST

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கூட்டணி சார்பில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், இன்று காலை ராமலிங்க நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று 60 வது பிறந்த நாள் கொண்டாடும் கணபதி ராஜ்குமார், அப்பகுதியில் திமுக கட்சியினர் உடன் கேட் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் கேக்குகளை வழங்கினார். அவருக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

More