தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dmdk Chief Premalatha Vijayakanth Talk About Parliment Election Alliance

Election 2024: தேமுதிக யாருடன் கூட்டணி? - ஓப்பனாக உடைத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

Feb 07, 2024 07:00 PM IST Karthikeyan S
Feb 07, 2024 07:00 PM IST
  • நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்பு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இதுவரை கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனியாக களம் காண பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபித்துள்ளது போல, இந்த தேர்தலிலும் நிரூபிக்கும். யார் அதிக தொகுதிகளைத் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல் தான் குழு அமைக்க உள்ளோம். வரும் பிப். 12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி தரும் கட்சியுடன் தான் கூட்டணி." என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
More