தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Director Sa Chandrasekar Speech In Desingu Raja 2 Movie Launch Event

Director SA Chandrasekar: "லியோ இரண்டாம் பாதி..! அன்றே சொன்னேன்" - இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பகிர்ந்த தகவல்

Jan 28, 2024 04:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 28, 2024 04:34 PM IST
  • விமல் நடிப்பில், இயக்குநர் எழில் இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது லியோ குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். அதில் , “ஒரு படத்தின் காபியை ரிலீசுக்கு 5 நாள்கள் முன்னர் பார்த்தேன். அதன் முதல் பாதியை பார்த்துவிட்டு மிகவும் பிடித்து போனது. அந்த இயக்குநருக்கு போன் செய்து ஒரு படம்னா இப்படித்தான் இருக்கணும் என முதல் பாதி குறித்து பாராட்டினேன். அவரும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதன் பின்னர், இரண்டாம் பாதியில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினேன். அந்த குறிப்பிட்ட மதத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகள் இல்லை என்றும் கூறினேன். உடனடியாக அந்த இயக்குநர் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் சார்.. பிறகு போன் செய்கிறேன் என வைத்துவிட்டார். இந்த காலத்து இயக்குநர்கள் தாங்கள் எடுப்பதுதான் சரியான படம் என நினைக்கின்றனர். சரியான விமர்சனங்களை கூட காது கொடுத்து கேட்பது கிடையாது. படம் வெளியான பின்னர், நான் சொன்ன அதே விமர்சனத்தை கிட்டத்தட்ட அனைவருமே கூறினார்” என்றார். தனது மகன் நடித்த லியோ படம் குறித்து தான் அவர் அப்படி மறைமுகமாக பேசியுள்ளார் என கூறப்படும் நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
More