Ameer: கொஞ்சம் டைம் குடுங்களேன் - இயக்குனர் அமீர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ameer: கொஞ்சம் டைம் குடுங்களேன் - இயக்குனர் அமீர்

Ameer: கொஞ்சம் டைம் குடுங்களேன் - இயக்குனர் அமீர்

Published Apr 10, 2024 02:29 PM IST Pandeeswari Gurusamy
Published Apr 10, 2024 02:29 PM IST

  • ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு திடல் தொழுகையி்ல் இயக்குனர் அமீர் கலந்துகொண்டார். பின்னர் இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்பதை நிருபிப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பது தான் என்னிடம் வரும் வார்த்தை என்றார். டார்கெட் செய்து விசாரணை நடைபெறுகிறதா? என்ற கேள்விக்கு உறுதியாக சொல்ல முடியாது இது குறித்து உறுதியாக ஒரு நாள் பேசுவேன். ED ரெய்டில் உள்நோக்கம் உண்டா? என்ற கேள்விக்கு, இதனை உறுதியாக சொல்ல முடியாது ஆனால் என்னால் ஒரு மாதமாக பேச முடியவில்லை என்பது உண்மை, இறைவன் மிகப்பெரியவன் என சொல்லிக்கொண்டு கடந்து போறவன் நான் என்றார். ED விசாரணை நேர்மையாக உள்ளதா? என்ற கேள்விக்கு, விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது. விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, நேற்று இரவு ED சோதனை முடிவடைந்தது . இது குறித்து முழுமையாக பேச கொஞ்சம் நேரம் தாருங்கள் என்றார்

More