தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Dindigul Indian Overseas Bank Fire!

Dindigul: திண்டுக்கல் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் தீ விபத்து!

Mar 12, 2024 01:10 PM IST Pandeeswari Gurusamy
Mar 12, 2024 01:10 PM IST
  • திண்டுக்கல் ஆர். எஸ். சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நான்கு மணி அளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கரும்புகை வெளியானது. புகை வெளியானதை கண்ட அருகில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு 2 தீயணைப்பு துறை வண்டியில் விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு வங்கியில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய அறை முற்றிலும் தீ பிடித்ததால் பல லட்சம் மதிப்பிலான கணினிகள் ,மேஜைகள், உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து நாசமானது. அதேசமயம் தீ அதிக அளவு பரவாததால் சேமிப்பு அறையில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் நல்வாய்ப்பாக சேதம் இல்லாமல் தப்பியது. RS சாலையில் பிரதான வங்கியாக செயல்பட்டு வரக்கூடிய இந்திய ஓவர் சிஸ் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
More