தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul: பழனியில் கண்களை கட்டிக்கொண்டு கீ போர்டு வாசிக்கும் சிறுவன் - குவியும் பாராட்டு

Dindigul: பழனியில் கண்களை கட்டிக்கொண்டு கீ போர்டு வாசிக்கும் சிறுவன் - குவியும் பாராட்டு

Jun 26, 2024 05:10 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 26, 2024 05:10 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி மதீனா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. டீக்கடை நடத்தி வரும் இவருக்கு சாகிதா என்ற மனைவியும் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும், சையது கமால் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சையது கமால் சிலம்பம் ,கால்பந்து, கராத்தே மற்றும் பல்வேறு போட்டிகளில் ஏராளமான கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இதையடுத்து எந்தவொரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் யூட்யூபில் பார்த்து பார்த்து கீ போர்டு வாசிப்பை சிறிது சிறிதாக ஆர்வத்துடன் கற்றுக் கொண்ட சையது கமல், தற்போது துணியால் கண்களை கட்டிக்கொண்டு தேசிய கீதம், சினிமா பாடல்களை வாசித்துக் காட்டி அசத்தியுள்ளார். இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலான புத்தம் புது காலை பாடலை வாசித்துக் காட்டி சையது காமலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
More