Dindigul: பாலியல் வன்கொடுமை புகார் ..தலைமறைவான திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் கைது!-dindigul bjp district secretary arrest in sexual abuse case - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul: பாலியல் வன்கொடுமை புகார் ..தலைமறைவான திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் கைது!

Dindigul: பாலியல் வன்கொடுமை புகார் ..தலைமறைவான திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் கைது!

Apr 11, 2024 04:57 PM IST Karthikeyan S
Apr 11, 2024 04:57 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்ட பொறுப்பாளராக வேலை பார்ப்பவர் கலைச்செல்வி. இவர் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பணியில் இருந்த பொழுது புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவி செல்வ ராணியின் கணவரும் திண்டுக்கல் மேற்கு பாஜக மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் சமையலறையில் புகுந்து பணியில் இருந்த கலைச்செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி அவரிடமிருந்து தப்பி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் மீது புகார் அளித்தார். இதனால் தலைமறைவான மகுடீஸ்வரனை போலீசார் தனிப்படை அமைத்து கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

More