தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!

Tiruvannamalai: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்..நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!

May 19, 2024 03:02 PM IST Karthikeyan S
May 19, 2024 03:02 PM IST
  • விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 5 மணி முதல் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பாக வரிசையில் வரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தனியே காலடி மேட்டில் தண்ணீர் தெளித்து பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைய பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் குடிநீர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
More