தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani Temple: பக்தியோடு பழனிக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி!

Palani Temple: பக்தியோடு பழனிக்கு சாமி கும்பிட வந்த முருகனுக்கு நெஞ்சுவலி!

May 26, 2024 01:14 PM IST Karthikeyan S
May 26, 2024 01:14 PM IST
  • பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வேடசந்தூர் அருகே வடமதுரையைச் சேர்ந்த முருகன் என்ற பக்தர் படிபாதை வழிபாதையாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ரோப் கார் வழியாக கீழே அழைத்துவந்து திருக்கோவில் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
More